ADDED : ஆக 03, 2024 04:34 AM
காரைக்காலில் உள்ள கருவேல மரங்களை அழித்து மீண்டும் சாகுபடிக்கு ஏற்றவாறு நிலத்தினை தயார் செய்ய மானியமாக ெஹக்டெருக்கு 15 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கருவேல மரக்கழிவில் இருந்து இயற்கை உயிர் உரங்கள் தயாரிக்க நடப்பாண்டில் செயல்விளக்கம் நடத்தப்படும்.
விவசாயிகள் நியாயமான ஆதார விலையை உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் உற்பத்தி செய்யும் நெல்லின் தரத்தை இந்திய உணவு கழகம் மூலம் கொள்முதல் செய்வதற்கும், அறுவடைக்கு பிந்தைய செயல்பாடுகளுக்கு தேவையான நிதியுதவி வழங்கப்படும். இதன் மூலம் புதுச்சேரியில் 10,000 டன், காரைக்கால்-20,000 டன் நெல் இந்திய உணவு கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
கொடி வகை காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க ஒரு விவசாயிக்கு விவசாயிக்கு ஏக்கருக்கு 1 லட்சம் சாகுபடி பிந்தைய மானியமாக வழங்கப்படும்.
வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் நவீன உபகரணங்கள் விவசாயிகள் பயன்படுத்த வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும், வேளாண் துறைக்கு 171.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.