தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கனடாவில் வேலை என கூறி ரூ.17.71 லட்சம் 'அபேஸ்'

கனடாவில் வேலை என கூறி ரூ.17.71 லட்சம் 'அபேஸ்'

கனடாவில் வேலை என கூறி ரூ.17.71 லட்சம் 'அபேஸ்'


ADDED : மார் 23, 2024 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2024 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி, கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார், 52; வெளிநாடு செல்ல சமூக வலை தளங்களில் வேலை தேடி வந்தார்.

இவரது பேஸ்புக்கில் கனடாவில், பிரபல நிறுவனத்தில் வேலை உள்ளதாக விளம்பரம் வந்துள்ளது.

அதில் இருந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்ட போது, நிறுவனத்தின் மேலாளர் என ஒருவர் அறிமுப்படுத்தி கொண்டார்.

அந்த நபர் ரமேஷ்குமாரின் சான்றிதழ், பாஸ்போட் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும் என, கேட்டார். அதனை அவர் அனுப்பினார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அந்த நபர் தொடர்பு கொண்டு, உங்கள் சான்றிதழ்கள் எல்லாம் சரியாக உள்ளது. கனடா நாட்டில் வருவதற்கு விசா, உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளது. அதற்கான பணம் அனுப்ப வேண்டும் என, கூறினார்.

அதை நம்பி, ரமேஷ்குமார் 17.71 லட்சம் ரூபாயை பல தவணைகளாக அனுப்பினார். அதன்பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து, ரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us