தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சித்தானந்த சுவாமி கோவிலில் 29ம் தேதி 189ம் ஆண்டு குருபூஜை

சித்தானந்த சுவாமி கோவிலில் 29ம் தேதி 189ம் ஆண்டு குருபூஜை

சித்தானந்த சுவாமி கோவிலில் 29ம் தேதி 189ம் ஆண்டு குருபூஜை


UPDATED : மே 18, 2026 07:55 PM

ADDED : மே 18, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 07:55 PM ADDED : மே 18, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமியின் 189ம் ஆண்டு குரு பூஜை வரும் 29ம் தேதி நடக்கிறது.

அதனையொட்டி, வரும் 28 ம் தேதி மாலை 6:00 மணிக்கு கலச பிரதிஷ்டை, கணபதி ேஹாமம், இரவு 8 மணிக்கு பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடக்கிறது. மறுநாள் 29ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், ருத்ர ேஹாம ம், சுவாமிக்கு மகா அபிேஷகம், பூர்ணாஹூதி யை தொடர்ந்து, கலசம் புறப்பாடாகி சுவாமிகளுக்கு கலசாபிேஷகம் நடக்கிறது.

காலை 10:30 மணிக்கு சுவமிக்கு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 10 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கிறது.

குரு சித்தானந்த சுவாமி குரு பூஜைக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் தேவஸ்தானத்தில் கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும், மகா அபிேஷகத்திற்கு தேவையான பால், பழம், தேன் , விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களை வரும் 29ம் தேதி காலை 7 மணிக்குள் தேவஸ்தானத்தில் வழங்கிடலாம்.

குருபூஜை ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us