/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அதிகாரிகளுக்கு 2 நாள் பயிற்சி
/
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அதிகாரிகளுக்கு 2 நாள் பயிற்சி
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அதிகாரிகளுக்கு 2 நாள் பயிற்சி
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அதிகாரிகளுக்கு 2 நாள் பயிற்சி
ADDED : மே 18, 2024 06:33 AM
புதுச்சேரி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் மற்றும் தண்டனை சட்டங்கள் குறித்து போலீஸ், சட்டத்துறை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு அறையில் நேற்று துவங்கியது.
கவர்னர் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தலைமை செயலர் சரத் சவுக்கான், டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி, டி.ஐ.ஜி., பிரிஜேந்திரகுமார் யாதவ், சீனியர் எஸ்.பி.க்கள் மற்றும் எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
துவக்க விழாவைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மனோகரன், சென்னை தீவிரவாத தடுப்பு மற்றும் கியூ பிரான்ஞ் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சிவதாணுபிள்ளை ஆகியோர் பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.
2ம் நாளான இன்று, பல்வேறு தலைப்புகளில், சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நாகராஜன், கருணாநிதி, சங்கர முரளி ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.