ADDED : மார் 08, 2025 03:37 AM
புதுச்சேரி : ஜீவானந்தபுரத்தில் 270 கிராம் கஞ்சா வைத்திருந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஜீவானந்தபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பைக்கில் வந்த இருவர், போலீசாரைகண்டு தப்பியோட முயன்றபோது அவர்களை, மடக்கி விசாரித்தனர்.
ஜீவானந்தபுரம் புருேஷாத் தமன் மகன் தர்மதுரை என்கிற தர்மன், 24; முத்தி யால்பேட்டை, சோலை நகர் குணசேகரன் மகன் அருண்குமார், 24; என்பது தெரியவந்தது. ரவுடிகளான தர்மதுரையிடம் 24 பாக்கெட்களில் 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள், அருண்குமாரிடம் 18 பாக்கெட்களில் 120 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இந்தன.
இருவரையும் போலீசார் கைது செய்து, 270 கிராம் கஞ்சா பொட்டலங்கள், பைக் மற்றும் 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். இருவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவர் மீதும் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.