ADDED : ஜூன் 13, 2024 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஏனாம் கடைகளில் குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஏனாம் பழைய பஸ் நிலையம் அருகே கடைகளில் குட்கா விற்பனை செய்வதாக ஏனாம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் அங்கு சென்று கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அதில், இரண்டு குட்கா விற்பனை செய்வது தெரியவந்தது. கடைகளின் உரிமையாளர்கள், காக்கிநாடா பகுதியை சேர்ந்த ராம்பாபு, 39; ஏனாம் பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரா ராவ், 33, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 ஆயிரத்து 500 மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.