/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சிறுவன் உட்பட 2 பேர் கைது
/
தொழிலாளி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சிறுவன் உட்பட 2 பேர் கைது
தொழிலாளி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சிறுவன் உட்பட 2 பேர் கைது
தொழிலாளி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சிறுவன் உட்பட 2 பேர் கைது
ADDED : மே 14, 2024 05:00 AM
புதுச்சேரி: வெல்டிங் தொழிலாளி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ், 41; வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது அண்ணன் மகன் விக்ரமன் , பைக்கில் வேகமாக சென்றார். இதை அதே பகுதியை சேர்ந்த சிறுவன் கண்டிதித்தார். இதனால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதுபற்றி, விக்ரமன், உறவினரான சத்தியராஜிடம் கூறினார். நேற்று அந்த சிறுவனை, சத்தியராஜ் அழைத்து ஏன் தகராறு செய்தாய் என கேட்டார். இதில், ஆத்திரமடைந்த அந்த சிறுவன் அங்கிருந்து சென்றான்.
பின்னர், சிறுவன் தனது நண்பர்கள் இருவரிடம் கூறி இருவரையும் அழைத்து சென்று பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை அப்பகுதி வழியாக சென்ற சத்தியாஜ் மீது நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், பலத்த காயமடைந்த, சத்தியராஜ், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப், 20; என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். 16 வயது சிறுவனை அரியாங்குப்பம் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றோருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

