/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 பேரிடம் ரூ. 1.39 லட்சம் மோசடி
/
2 பேரிடம் ரூ. 1.39 லட்சம் மோசடி
ADDED : மே 12, 2024 05:00 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பேரிடம் 1.39 லட்சம் ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் சூர்யா. இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி அவர் 75 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார்.
அதை போல், புதுச்சேரியை ஆகாஷ் அம்புரோஸ் என்பவரை போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி அவர், 64 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.