2 பேரிடம் ரூ. 29 ஆயிரம் மோசடி மர்ம நபர்களுக்கு வலை
2 பேரிடம் ரூ. 29 ஆயிரம் மோசடி மர்ம நபர்களுக்கு வலை
ADDED : மே 30, 2024 04:35 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பேரிடம் 29 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் சைமன். இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார்.
அதை நம்பி, அவர், 26 ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் முதலீடு செய்து, ஏமாந்தார். அதே போல, லாஸ்பேட்டை சேர்ந்த முருகன், என்பவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பி, அவர் 3 ஆயிரம் பணத்தை அனுப்பி ஏமாந்தார். இருவரும் அளித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.
