/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் ஏட்டை தாக்கி தப்பியோடிய 2 ரவுடிகளுக்கு எலும்பு முறிவு
/
போலீஸ் ஏட்டை தாக்கி தப்பியோடிய 2 ரவுடிகளுக்கு எலும்பு முறிவு
போலீஸ் ஏட்டை தாக்கி தப்பியோடிய 2 ரவுடிகளுக்கு எலும்பு முறிவு
போலீஸ் ஏட்டை தாக்கி தப்பியோடிய 2 ரவுடிகளுக்கு எலும்பு முறிவு
ADDED : ஆக 09, 2024 04:42 AM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே போலீஸ் ஏட்டை தாக்கிய ரவுடிகளை பிடிக்க சென்றபோது தப்பியோடிய ரவுடிகள் இருவர் கீழே விழுந்து கை, காலில் எலும்பு முறிந்து, சிகிச்சை பெறுகின்றனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் பூக்கடை நடத்தி வந்தவர் ரத்தினவேல். இவரை கடந்த 31ம் தேதி அதேப் பகுதியை சேர்ந்த நவீன், வில்லியனுார், அம்மா நகர் ரவுடி சதீஷ் உள்ளிட்ட கும்பல் கத்தியால் வெட்டியது. முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சதீைஷ தேடி வந்தனர்.
கஞ்சா வழக்கில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு வசந்தகுமார், ஏற்கனவே சதீ ைஷ கைது செய்தவர். அவரது உதவியை முத்தியால்பேட்டை கிரைம் போலீசார் நாடினர்.
இதனிடையே நேற்று முன்தினம் காலை சதீஷ் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து ஏட்டு, வசந்தகுமார், கிரைம் போலீஸ்சாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு முன்னதாக அம்மா நகருக்கு சென்றார். வீட்டில் இருந்த சதீைஷ 19, பிடித்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சதீஷின் சகோதரர் பிரதீப் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட ரவுடி கும்பல், குக்கர் மூடி உள்ளிட்ட ஆயுதங்களால் ஏட்டு வசந்தகுமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, பிரதீப், சதீஷ் மற்றும் அவரது மனைவி ராஜேஷ்வரி, சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை பிடிக்க சென்றனர்.
போலீசாரை கண்டு தப்பியோடிய போது கீழே வழுக்கி விழுந்ததில் சதீஷிற்கு கையிலும், பிரதீப்பிற்கு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் தற்போது இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வழக்கில் சதீஷ் மனைவி ராஜேஷ்வரி மற்றும் சிறுவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.