/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரையில் ரகளை; 2 வாலிபர்கள் கைது
/
கடற்கரையில் ரகளை; 2 வாலிபர்கள் கைது
ADDED : ஏப் 17, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கடற்கரை பகுதியில் ரகளையில் ஈடுப்பட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடற்கரை பகுதியில் போலீஸ் பூத் அருகே நேற்று இரண்டு வாலிபர்கள் நின்று, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அவதுாறாக பேசி ரகளையில் ஈடுபட்டனர். இதுபற்றி அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார், அங்கு சென்று வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த புகழேந்தி, 19; ஸ்டாலின் வில்சன், 20; என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

