/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் இருவரிடம் ரூ.2.16 லட்சம் மோசடி
/
புதுச்சேரியில் இருவரிடம் ரூ.2.16 லட்சம் மோசடி
ADDED : செப் 03, 2024 06:24 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இரண்டு பேரிடம் ரூ. 2.16 லட்சம் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி ஐயங்குட்டிபாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர் 1.94 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அந்த நபர் கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடித்தார். ஆனால், சம்பாதித்த லாப பணத்தை அவரால் எடுக்க முடியாமல் அவர் ஏமாந்தார்.
மேலும், தேங்காய்த்திட்டு, பகுதியை சேர்ந்தவர் அன்சி தனியார் கடன் வழங்கும் செயலியை பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார். அப்போது, அவரது வங்கி கணக்கில் 36 ஆயிரம் ரூபாய் பணம் வந்தது. அது தொடர்பாக நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, என்னுடைய பணம், அனுப்ப வேண்டும் என கூறினார். பணத்தை அந்த நபரின் கணக்கிற்கு அனுப்பினார். ஆனால், அனுப்பிய பணத்திற்கு மேல் கூடுதலாக பணம் வேண்டும் என அந்த நபர் மிரட்டினார்.
தொடர்ந்து, சண்முகாபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, இவர் செயலி மூலம் கடன் தொடர்பாக விண்ணப்பித்துள்ளார்.
இவரை தொடர்பு கொண்ட நபர், கடன் வேண்டுமானால், முன்பணம் அனுப்ப வேண்டும் என கூறினார். அதை நம்பி, அவர் 22,000 ஆயிரம் ரூபாய் அனுப்பி மர்ம நபரிடம் ஏமாந்தார்.
இதுகுறித்து, 3 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.