தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தலில் போட்டியிட்ட 217 வேட்பாளர்கள் டிபாசிட் இழப்பு

தேர்தலில் போட்டியிட்ட 217 வேட்பாளர்கள் டிபாசிட் இழப்பு

தேர்தலில் போட்டியிட்ட 217 வேட்பாளர்கள் டிபாசிட் இழப்பு


ADDED : மே 06, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 217 வேட்பாளர்கள் டிபாசிட்டை இழந்துள்ளனர்.

புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளில்  தே.ஜ., கூட்டணியில் என்.ஆர்., காங்., பா.ஜ., அ.தி.மு.க.,  ல.ஜ.க., ஒரு அணியாகவும், இண்டி கூட்டணியில்  காங்., தி.மு.க., வி.சி.க., ஒரு அணியாகவும், த.வெ.க., நாம் தமிழர் கட்சி தனி அணியாகவும் போட்டியிட்டது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 294 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.  இதில் போட்டியிட்டவர்கள் டிபாசிட் தொகையை திரும்ப பெற பதிவான ஓட்டுகளில் 6ல் ஒரு பங்கு  பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் டிபாசிட் தொகை வேட்பாளருக்கு திரும்ப கிடைக்காது.

இதில், காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், சுயேச்சைகள் உட்பட 217 வேட்பாளர்கள் டிபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us