தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 3 மாவட்டங்களில் பறிமுதல் செய்த 233 கிலோ கஞ்சா அழிப்பு 

3 மாவட்டங்களில் பறிமுதல் செய்த 233 கிலோ கஞ்சா அழிப்பு 

3 மாவட்டங்களில் பறிமுதல் செய்த 233 கிலோ கஞ்சா அழிப்பு 


ADDED : ஜூலை 01, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 233 கிலோ கஞ்சா, கோர்ட் உத்தரவுபடி போலீசார் தீவைத்து அழித்தனர்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் மாவட்டங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், விழுப்புரம் மாவட்டத்தில் 90 வழக்குகளில் 38 கிலோ, கள்ளக்குறிச்சியில் 88 வழக்குகளில் 35 கிலோ, கடலுார் மாவட்டத்தில் 35 வழக்குகளில் 160 கிலோ என, 233 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவைகள் கோர்ட் உத்தரவின் பேரில், நேற்று தீ வைத்து அழிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், நேற்று போதை பொருட்கள் அழிக்கப்பட்டது. 

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு, கடலுார் எஸ்.பி., விவேகானந்த் சுக்லா, மொபைல்  தடய அறிவியல் ஆய்வக (பொறுப்பு) உதவி இயக்குநர் ராஜீவ், டி.எஸ்.பி., கந்தசாமி, திருக்கோவிலுார் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் அறிவழகி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us