/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரோவில்லில் 25வது ஆண்டு குதிரையேற்றப்போட்டி துவக்கம்
/
ஆரோவில்லில் 25வது ஆண்டு குதிரையேற்றப்போட்டி துவக்கம்
ஆரோவில்லில் 25வது ஆண்டு குதிரையேற்றப்போட்டி துவக்கம்
ஆரோவில்லில் 25வது ஆண்டு குதிரையேற்றப்போட்டி துவக்கம்
ADDED : மார் 08, 2025 03:49 AM

வானூர் : புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் 'ரெட் எர்த்' குதிரை யேற்ற பயிற்சி பள்ளி சார்பில், 25ம் ஆண்டு தேசிய குதிரையேற்ற போட்டிகள் நேற்று துவங்கியது.
காலை 6;00 மணி முதல் 9;00 மணி வரையும், மாலை 4;00 மணி முதல் 6;00 மணி வரை, அலங்கார நடை, தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
நேற்று துவங்கிய ஜூனியர் தகுதிச்சுற்றுகள், நாளை 9ம் தேதி வரை நடக்கிறது. வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை குதிரையேற்றப்போட்டிகள் மற்றும் குதிரை கண்காட்சியும் நடக்கிறது.
போட்டிகளில் துாத்துக்குடி, ஊட்டி, சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 100 குதிரைகளும், 200 குதிரையேற்ற வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.