/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி இரட்டை கொலை வழக்கில் 28 பேர் விடுதலை ஒருவருக்கு மட்டும் 7 ஆண்டு சிறை
/
புதுச்சேரி இரட்டை கொலை வழக்கில் 28 பேர் விடுதலை ஒருவருக்கு மட்டும் 7 ஆண்டு சிறை
புதுச்சேரி இரட்டை கொலை வழக்கில் 28 பேர் விடுதலை ஒருவருக்கு மட்டும் 7 ஆண்டு சிறை
புதுச்சேரி இரட்டை கொலை வழக்கில் 28 பேர் விடுதலை ஒருவருக்கு மட்டும் 7 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 07, 2024 03:31 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 28 பேர் மீதான குற்றம் நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுதம் வைத்திருந்ததாக ஒருவருக்கு மட்டும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
புதுச்சேரி தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பை சேர்ந்தவர் ரவுடி பாம்ரவி, 33; இவர் மீது, 6 கொலை வழக்குகள் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் புதுச்சேரியில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளது. இவர், 2021 அக்டோபர் 24ம் தேதி, வாணரப்பேட் முருகசாமி நகரை சேர்ந்த பரிடா அந்தோணி ஸ்டீபன், 28; என்பவருடன் பைக்கில் சென்றார்.
வாணரப்பேட் ஆலன் வீதி, ராஜராஜன் வீதி சந்திப்பு அருகே சென்றபோது, அவர்களை வழிமறித்த கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. அதில் அந்தோணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பியோடிய பாம்ரவியை அந்த கும்பல் விரட்டி சென்று, கத்தியால் வெட்டி கொலை செய்தது.
இது தொடர்பாக, ரவுடி வினோத், தீன், மர்டர் மணிகண்டன் உள்ளிட்ட 31 பேர் மீது, முதலியார்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். காஞ்சிபுரம், மதுரையை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். வழக்கில் சேர்க்கப்பட்ட மார்சல், டபுள் தேவேந்திரன் தலைமறைவாக இருந்தனர். இதில் தேவேந்திரன் சமீபத்தில் கைதானார்.
இந்த இருவரை தவிர, மற்ற 29 பேர் மீது, புதுச்சேரி 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ரங்கநாதன் ஆஜராகி நடத்தினார். விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதையொட்டி, குற்றம்சாட்டப்பட்ட மர்டர் மணிகண்டன் உட்பட 29 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 28 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்வதாக, கூடுதல் அமர்வு நீதிபதியும், மாவட்ட தலைமை நீதிபதி (பொறுப்பு) நீதிபதியுமான சந்திரசேகரன் உத்தரவிட்டார்.
மேலும் வழக்கில் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரேம், 41; ஆயுதம் வைத்திருந்தது உறுதியானதானால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.