/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தல் புதுச்சேரியில் 2ம் சுற்று ஓட்டுப்பதிவு
/
பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தல் புதுச்சேரியில் 2ம் சுற்று ஓட்டுப்பதிவு
பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தல் புதுச்சேரியில் 2ம் சுற்று ஓட்டுப்பதிவு
பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தல் புதுச்சேரியில் 2ம் சுற்று ஓட்டுப்பதிவு
ADDED : ஜூலை 08, 2024 04:14 AM

புதுச்சேரி: பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று ஓட்டு பதிவு புதுச்சேரியில் நேற்று நடந்தது.
பிரான்ஸ் நாட்டை பொறுத்தவரை அதிபர் ஆட்சி முறை நிலவுகிறது. அதிபராக இமானுவேல் மக்ரோன் உள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி முதல் 9 வரை நடந்தது. அதில் பிரான்சும் பங்கேற்றது. அந்தத் தேர்தலில், மக்ரோன் மையவாத கூட்டணியை விட, தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தனது அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பிரான்ஸ் பார்லி மென்ட்டை கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்தப்படும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோவன் திடீரென அறிவித்தார்.
அதன்படி, பிரான்ஸ் பார்லிமென்ட்டிற்கு 577 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக முதல் சுற்று தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடந்தது. அதில், தேசிய பேரணி கட்சி 33.2 சதவீத ஓட்டுகளுடன் முன்னிலையில் இருந்தது. இடதுசாரிகளின் கூட்டணி 28.1 சதவீத ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிபர் இமானுவேல் மக்ரோன் கூட்டணி 21 சதவீத ஓட்டுகளுடன் பின்தங்கியது.
புதுச்சேரியை பொருத்தவரை முதல் சுற்று தேர்தலில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 4,535 பேரில் 892 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். இவற்றில் 12 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ன. 3 ஓட்டு சீட்டில் ஓட்டே போடவில்லை. எனவே செல்லதக்க மொத்தமுள்ள 877 ஓட்டுகளில் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பஜோட் பிராங்கிற்கு மட்டும் 541 ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
மறுமலர்ச்சி கட்சியை சேர்ந்த மற்றொரு வேட்பாளர் ஜெனெட் அன்னே 12.08 சதவீத ஓட்டுகளான 106 ஓட்டுகளை பெற்றிருந்தார்.
இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் இரண்டாம் சுற்று தேர்தல் நேற்று நடந்தது. 12 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகளை பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் இந்த இரண்டாம் சுற்று தேர்தலில் பங்கேற்க தகுதி பெற்றனர். இதற்காக புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் 4 இடங்களில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.
முதல் சுற்றுபோல இரண்டாம் சுற்றிலும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஓட்டளிக்க அவ்வளவு ஆர்வம் காட்ட வில்லை. எனவே மந்தகதியிலேயே மாலை 6:00 மணி வரை ஓட்டு பதிவு நடந்தது. தொடர்ந்து ஓட்டு கள் எண்ணி, ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது.