/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஞ்சவடீ கோவிலில் 3 நாள் வசந்த உற்சவம்
/
பஞ்சவடீ கோவிலில் 3 நாள் வசந்த உற்சவம்
ADDED : மே 14, 2024 04:58 AM
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் வசந்த உற்சவம் வரும் 17ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில், 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, பட்டாபிேஷக ராமச்சந்திரமூர்த்திக்கு வசந்த உற்சவம் வரும் 17ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கிறது.
விழா நடக்கும் 3 நாட்களும் மாலை 5:00 மணியளவில், வசந்த மண்டபத்தில் சீதா பிராட்டியுடன் ராமர் எழுந்தருள்கிறார். 17ம் தேதி மாலையில், வசந்த மண்டபத்தில் ராமர் - சீதாவுக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. பின், புஷ்ப பந்தலில் சேவை சாதிக்கின்றனர்.
இரண்டாம் நாளான 18ம் தேதியன்று மாலை, திருமஞ்சனத்தை தொடர்ந்து பழப்பந்தலில் சேவை சாதிக்கின்றனர்.
விழாவின் மூன்றாம் நாளான 19ம் தேதியன்று காலை 10:00 மணியளவில், சீதா - ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
மாலையில் வசந்த மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனமும், தொடர்ந்து காய்கறிகள் பந்தலில் சீதா - ராமர் சேவை சாதிக்கின்றனர்.

