ADDED : மே 01, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் பாகூர் பகுதிகளில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். முள்ளோடை சந்திப்பில் சாலையில், மது போதையில் பொதுமக்களை ஆபாசமாக திட்டி தகராறில் ஈடுபட்ட கடலுார், தாழங்குடா சுனாமி வீதியை சேர்ந்த பிரகாஷ், 50; வில்லியனுார், தட்டாஞ்சாவடி இ.பி., காலனியை சேர்ந்த பிரபு, 32, ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல், பாகூர் உதவி சப் இன்ஸ்பெக்டர் சிவா ரோந்து சென்றபோது, சோரியாங்குப்பம் நவாப் தோப்பு பகுதியில் போதையில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் வள்ளலார் நகர் நாகராஜ், 53, என்பவரை கைது செய்தனர்.

