/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஊழியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் 3 பேர் கைது
/
அரசு ஊழியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் 3 பேர் கைது
அரசு ஊழியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் 3 பேர் கைது
அரசு ஊழியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் 3 பேர் கைது
ADDED : ஆக 05, 2024 04:45 AM

காரைக்கால்: காரைக்காலில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைந்து 20 சவரன் நகைகளை திருடிய கணவன் மனைவி உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் நிரவி மேலஒடுதுறை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அன்பழகன் இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பிப்., 7ம் தேதி தனது மகளை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுள்ளார்.
பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நெக்லஸ், டாலர், தோடு ஜிமிக்கி,மோதிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது. இதுகுறித்து நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஹஜ்மீர் ஹாஜா ஷெரிப். அவரது நண்பர் வேளாங்கண்ணியை சேர்ந்த விக்னேஸ்வரன்.திருவாரூரை சேர்ந்த பிரதாப் குமார்.நிரவி நடுஓடுதுறையை சேர்ந்த ஹஜ்மீர் ஹாஜா ஷெரிப் மனைவி வசந்த பிரியா. செங்கோட்டையை சேர்ந்த ஹாஜா மைதீன். பாசில் மற்றும் ஹஜ்மீர் ஹாஜா ஷெரிப் சகோதரி ஷைனி ஆகிய 7பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட தெரியவந்தது.
இந்த வழக்கில் நான்கு பேரை கைது செய்த நிலையில் மேலும் முக்கிய குற்றவாளி ஹஜ்மீர் ஹாஜா ஷெரிப். அவரது மனைவி வசந்த பிரியா. நண்பர் பிரதாப் குமார் ஆகிய மூவரையும் நேற்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் திருடுபோன பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ் வழக்கில் துரித நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் பால் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோரை சீனியர் எஸ்.பி.,பாராட்டினார்.