ADDED : ஜூன் 21, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1.88 லட்சம் இழந்துள்ளனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்மநபர், தங்களுடைய கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்டை பணமாக மாற்றி தருவதாக கூறியுள்ளார். அதை நம்பி, அவரது கார்டு விவரங்கள் அனைத்தையும் மர்மநபரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின், அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 84 ஆயிரத்து 948 ரூபாய் மர்மநபர்கள் எடுத்து ஏமாற்றி உள்ளனர்.
இதேபோல், சொக்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் ஆயிரத்து 400, தவளக்குப்பத்தை சேர்ந்தவர் 2 ஆயிரத்து 362 என, 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 710 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
