ADDED : ஏப் 18, 2024 11:33 PM
புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, 1.38 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
சிவசங்கரி என்பவரிடம், தனியார் வங்கி அதிகாரி போல பேசிய நபர், அவரது கிரெடிட் கார்டில் உள்ள தொகையை உயர்த்த, வங்கி, கணக்கு, கிரெடிட் கார்டு விபரங்களை கேட்டுள்ளார்.
அந்த ஆசையில், மொபைல் போனிற்கு வந்த ஓ.டி.பி., எண்ணை கொடுத்ததும்,அவரது வங்கி கணக்கில் இருந்து 12 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
கதிரவன், என்பவரிடம் வீடியோ காலில் பேசிய நபர், அவரது ஆபாச வீடியோவை சமுக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டனார். அதற்கு பயந்து, அவர், 50 ஆயிரம் கொடுத்து ஏமாந்தார்.
புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து,விசாரித்துவருகின்றனர்.

