/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பேரிடம் ரூ. 7.48 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
3 பேரிடம் ரூ. 7.48 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
3 பேரிடம் ரூ. 7.48 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
3 பேரிடம் ரூ. 7.48 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : மே 01, 2024 11:39 PM
புதுச்சேரி : புதுச்சேரியில் 3 பேரிடம் 7.48 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரை, மர்ம நபர் ஒருவர் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்தபடியே அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி, அவர், 6.28 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
தொடர்ந்து, புதுச்சேரி சகாயமேரி, என்பவரை மொபைல் போன் மூலம், தொடர்பு கொண்ட நபர், பிரபல பைனாஸ் நிறுவன அதிகாரி பேசுவதாக கூறினார். குறைந்த வட்டிக்கு பணம் தருவதாகவும், அதற்கு முன்பணம் கட்ட வேண்டும் என, கூறினார். அவரது ஆசை வார்த்தை நம்பி, அப்பெண் 30 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
லட்சுமி என்பவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், உயர்நீதிமன்றத்தில் இருந்து பேசுவதாகவும், நீங்கள் சட்டவிரோதமாக, போதை மற்றும் மோசடி ஈடுபட்டுள்ளதால் வழக்கு தொடராமல் இருக்க பணம் தரவேண்டும் என, மிரட்டினார். பயந்து போன அப்பெண் 90 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

