ADDED : ஜூன் 08, 2026 06:51 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ. 84 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த நபரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை வங்கி ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், மர்ம நபர் கிரெடிட் கார்டு லிமிட்டை உயர்த்தி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய அவர் மர்ம நபர் அனுப்பிய ஓ.டி.பி எண்ணையும், தனது வங்கி விவரங்களையும் பகிர்ந்தார். பின் அவரது வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரத்து 387 ரூபாய் மாயமாகியது. பின் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதேபோல், மண்ணாடிப்பட்டை சேர்ந்த பெண் 23 ஆயிரத்து 750 ரூபாய். நல்லவாடு சேர்ந்த நபர் 10 ஆயிரத்து 200 ரூபாய் என 3 பேர் மொத்தமாக 84 ஆயிரத்து 330 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
