ADDED : மே 14, 2024 05:00 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம் 58 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஜவுத சவுஜன்யா இவர் புதுச்சேரியில் வசித்து வருகிறார். இவருக்கு மர்ம நபர் ஒருவர் டெலிகிராமில் தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி. அவர் 35 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தார். அவருக்கு ஆன்லைன் மூலம் கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடித்தார். அதற்கான பணத்தையும் அவரால் எடுக்க முடியவில்லை.
அதே போல, புதுச்சேரியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு மர்ம நபர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என கூறினார். அவர், 7 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார். ஏனாம் பகுதியை சேர்ந்தவர் வினுத்னாஸ் ரீ என்பவருக்கு ஆன்லைன் மூலம் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். அதை தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் மொபைலில், அவரிடம், வேலைக்கான நேர்காணல் நடத்தி வேலை வழங்குவதாக கூறி, முன்பணமாக 16 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இது குறித்து, 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
