தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாஸ்ட்புட் மாஸ்டர் கொலை நண்பர் உட்பட 3 பேர் கைது

பாஸ்ட்புட் மாஸ்டர் கொலை நண்பர் உட்பட 3 பேர் கைது

பாஸ்ட்புட் மாஸ்டர் கொலை நண்பர் உட்பட 3 பேர் கைது


ADDED : மே 03, 2026 09:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 09:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: ‘பாஸ்ட் புட்’ மாஸ்டரை அடித்து கொலை செய்த நண்பர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வில்லியனுார் அடுத்த சிவராந்தகம் பேட்டை  சேர்ந்த அஞ்சாப்புலி மகன் தேவா,24; புதுச்சேரி ஓட்டலில் பாஸ்ட்புட் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

கடந்த 1ம் தேதி இரவு அரியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி பின்புறம் உள்ள ஏரிக்கரை சாலையில் தேவா மற்றும் அவரது நண்பர்கள் ராகுல், தமிழ்பிரியன் உள்ளிட்ட 5 பேர் மது குடித்தனர்.

அப்போது, தேவாவிற்கும், தமிழ்பிரியனுக்கும் தகராறு ஏற்பட்டது. உடன் அங்கிருந்த சென்ற தமிழ்பிரியன் சற்று நேரத்தில் தனது நண்பர்கள் இருவருடன் வந்து, தேவாவை தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்கினார். தடுக்க வந்த ராகுலையும் தாக்கவிட்டு தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த தேவா மற்றும் ராகுலை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் தேவா இறந்தார். ராகுலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராகுல் அளித்த புகாரின் பேரில் வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் வழக்கு பதிந்து சிவராந்தகத்தில் பதுங்கியிருந்த தமிழ்பிரியன்,24; ஆதித்யன்.28; மற்றும் ஆகாஷ்,28; ஆகிய மூவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us