ADDED : ஏப் 13, 2024 04:22 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை குறவர் காலனி பகுதியில் கல்லுாரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், லாஸ்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை கருவடிக்குப்பம் ஏர்போர்ட் பின் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசை கண்டதும் தப்பியோடிய, இடையன்சாவடி, குறவர் காலனி, விஜய் (எ) லட்சுமணன், 22; உருளையன்பேட்டை, பெரியார் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார், 27; ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் 110 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
அதேபோல் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள சுப்பையா நகர் மெயின்ரோட்டில் உருளையன்பேட்டை போலீஸ் நடத்திய சோதனையில், நெல்லித்தோப்பு பெரியார் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்த காக்கா முட்டை (எ) மணிகண்டன், 24; என்ற வாலிபரை கைது செய்து, அவரிடம் இருந்து 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
