ADDED : ஆக 12, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உருளையன்பேட்டை பகுதி கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா விற்பனை செய்வதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் மதுக்கடை அருகே இருந்த பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர்.
கடையில் குட்கா இருந்ததை கண்டுபிடித்தனர். கடை உரிமையாளர் வில்லியனுாரை சேர்ந்த தயாளன், 53; என்பவரை கைது செய்தனர்.
அதே போல, பெரியக்கடை, காலாப்பட்டு பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் குட்கா விற்ற, கருணாகரன், 53; நாகராஜ், 43; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

