ADDED : மே 02, 2026 06:20 PM
அரியாங்குப்பம்: கல்லுாரி அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து செய்தனர்.
தவளக்குப்பம் – நல்லவாடு சாலை அரசு கல்லுாரி அருகே கஞ்சா விற்பதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று, சந்தேகத்தின் பேரில், 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள், புதுச்சேரி அடுத்த கிளியனுாரில் உள்ள நண்பர் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரிவந்தது.
அவர்களில் தவளக்குப்பம் விஷ்ணுகுமார், 25; மீன் பிடிக்கும் வேலை செய்து வருகிறார். சந்துரு, 25; தினேஷ், 22; இருவரும் ஓட்டலில் வேலை செய்கின்றனர்.
அவர்களிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 25 கிராம் கஞ்சா பாக்கெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
