ADDED : ஜூலை 30, 2026 08:32 PM
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். வில்லியனுார்–பாகூர் சாலையில் பொதுமக்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கரிக்கலாம்பாக்கம் பகுதியில் போலீசாரை பார்த்ததும் 3 வாலிபர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் காரிக்கலாம்பாக்கம், குறிஞ்சி நகரைச் சேர்ந்த தினேஷ், 25; கரிக்கலாம்பாக்கம், அன்னை பாத்திமா நகர் அப்துல்கலாம், 22; துப்புராயப்பேட் ஜீவா, 26, ஆகியோர் என்பதும், அவர்கள் இளைஞர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
