/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கு 30 பேர் தகுதி
/
முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கு 30 பேர் தகுதி
ADDED : செப் 05, 2024 05:14 AM
புதுச்சேரி: மூன்றாம் கட்ட முதுநிலை பல் மருத்துவப் படிப்பிற்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி சென்டாக் முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான 3ம் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக்கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 8, மாகி பல் மருத்துவக்கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ்-7, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ்-6, வெங்கடேஸ்வரா பல் மருத்துவக்கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ்-7, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ்- 2 என மொத்தம் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.