/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்கள் தவறவிட்ட 30 போன்கள் ஒப்படைப்பு
/
பொதுமக்கள் தவறவிட்ட 30 போன்கள் ஒப்படைப்பு
ADDED : மார் 09, 2025 03:37 AM
காரைக்கால் காரைக்கால் மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் மொபைல்போன் காணாமல் போனதாக காவல்துறையில் உரிமையாளர்கள் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து, பொது மக்கள் தவற விட்ட 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 மொபைல் போன்களை போலீசார் மீட்டனர். அவற்றை நேற்று உரிமையாளர்களிடம் சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா ஒப்படைத்தார்.
எஸ்.பி., சுப்ரமணியன், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீன், புருஷோத்தமன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.
சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா கூறுகையில், 'காரைக்காலில் பல்வேறு இடங்களில் மொபைல் போன்களை தவற விட்ட நபர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில், தனிப்படை போலீசார் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கஞ்சா, போதைப் பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.