ADDED : ஜூன் 02, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: தமிழகப் பகுதிக்கு கடத்த முயன்ற 300 லிட்டர் சாராயத்தை காட்டேரிக்குப்பம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றம் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 6 சாராயக் கேன்களில் 300 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து, மினி வேன் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், மினி வேனை ஓட்டி வந்த சந்தை புதுக்குப்பம், இந்திரா காந்தி தெருவை சேர்ந்த டிரைவர் பிரதாப், 30; என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரதாப் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம், மினிவேனை மேல் நடவடிக்கைக்காக புதுச்சேரி கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.