/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 மையங்களில் தட்டச்சு தேர்வு; 3,000 மாணவர்கள் எழுதினர்
/
3 மையங்களில் தட்டச்சு தேர்வு; 3,000 மாணவர்கள் எழுதினர்
3 மையங்களில் தட்டச்சு தேர்வு; 3,000 மாணவர்கள் எழுதினர்
3 மையங்களில் தட்டச்சு தேர்வு; 3,000 மாணவர்கள் எழுதினர்
ADDED : மார் 02, 2025 04:56 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் மூன்று மையங்களில் நடந்த தட்டச்சு தேர்வினை ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வமாக எழுதினர்.
தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித் துறை சார்பில் தமிழகம், புதுச்சேரியில் தட்டச்சு தேர்வுகள் நேற்று துவங்கியது.
புதுச்சேரியில் மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக், கூட்டுறவு மேலாண்மை நிறுவனம், மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளிட்ட மூன்று மையங்களில் நடந்த தேர்வினை மாணவர்கள் ஆர்வமாக எழுதினர்.
தமிழ் மற்றும் ஆங்கில இளநிலை தட்டச்சு தேர்வு முதல் அணிக்கு காலை 8:30 முதல் 9:40 மணி வரையிலும், 2-வது அணிக்கு காலை 10:20 முதல் 11.30 மணி வரையிலும், 3-வது அணிக்கு மதியம் 12:30 முதல் 1:20 மணி வரையில் நடந்தது.
தொடர்ந்து, தட்டச்சு தமிழ் ஆங்கிலம் முதுநிலை தேர்வு மதியம் 2:00 மணிக்கு துவங்கி, 5:30 மணி வரை நடந்தது.
இன்று 2ம் தேதி இரண்டாவது நாளாக தட்டச்சு தேர்வுகள் நடக்கிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.