/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.டி., ஊழியர் வீட்டில் 31 சவரன் நகைகள் திருட்டு
/
ஐ.டி., ஊழியர் வீட்டில் 31 சவரன் நகைகள் திருட்டு
ADDED : ஆக 05, 2024 04:40 AM
புதுச்சேரி: புதுச்சேரி ஐ.டி., ஊழியரின் வீட்டில் 31 சவரன் நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி குயவர்பாளையம் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத், 26; இவரும், இவரது மனைவியும் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் இருவரும் சென்னையில் தங்கி வாரந்தோறும் புதுச்சேரிக்கு வருவது வழக்கம். கிருஷ்ணபிரசாத் பெற்றோர்கள் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர்.
கடந்த 31ம் தேதி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக செல்ல கிருஷ்ண பிரசாத்தின் மனைவி வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுத்துள்ளார். அதில் சில நகைகள் காணமால் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கிருஷ்ணபிரசாத் உருளையான்பேட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மொத்தம் 31 பவுன் தங்க நகைகள் காணமால் போய் இருப்பதும், அதன் மதிப்பு ரூ. 15 லட்சம் என தெரியவருகிறது.
இதையடுத்து போலீசார் வீட்டிற்கு வந்து செல்லும் நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.