/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாகி டிரைவர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை
/
மாகி டிரைவர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை
ADDED : ஜூலை 08, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மாகியில், பஸ் டிரைவர் வீட்டில் புகுந்து 35 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட, கேரளாவில் உள்ள மாகி அடுத்த பள்ளூர் பேரல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்கரீம், தனியார் பஸ் டிரைவராக உள்ளார்.
இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், கடந்த 25ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 35 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டது.
இதுகுறித்து பள்ளூர் போலீசில் அப்துல்கரீம் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.