/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலாஜி வித்யாபீத் பல்கலை.,யில் 380 மாணவர்களுக்கு பட்டமளிப்பு
/
பாலாஜி வித்யாபீத் பல்கலை.,யில் 380 மாணவர்களுக்கு பட்டமளிப்பு
பாலாஜி வித்யாபீத் பல்கலை.,யில் 380 மாணவர்களுக்கு பட்டமளிப்பு
பாலாஜி வித்யாபீத் பல்கலை.,யில் 380 மாணவர்களுக்கு பட்டமளிப்பு
ADDED : ஆக 23, 2024 06:48 AM

பாகூர்: பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது.
பல்கலை வேந்தர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். துணை வேந்தர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் ஆண்டறிக்கை வாசித்தார். தலைமை விருந்தினராக சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி பங்கேற்று அதிக மதிப்பெண் பெற்ற 19 பேருக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
பல்கலைக்கழக வேந்தர் ராஜகோபாலன், மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 292 பேருக்கும், இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லுாரியை சேர்ந்த 71 பேருக்கும், இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் ப்ரொபஷனல் கல்வியில் 5 பேருக்கும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்கள், மற்றும் ஆராய்ச்சி கல்வியில் 12 பேருக்கும் என, மொத்தம் 380 பேருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
விழாவில், மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி டீன் சீதேஷ் கோஸ், ஆராய்ச்சி படிப்பு டீன் ரெட்டி, அகாடமிக் டீன் அசோக்குமார் தாஸ், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் ரமேஷ் சந்திர தேகா, மருத்துவமனை இயக்குநர் நிர்மல்குமார், பல் மருத்துவ கல்லுாரி முதல்வர் அருணா சர்மா உட்பட பலர் பங்கேற்றனர். பதிவாளர் பேராசிரியர் சீனுவாசன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகள் பொது மேலாளர் ஆஷா தலைமையில் செய்திருந்தனர்.