/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது
/
பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது
ADDED : மே 03, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பொது இடத்தில் மது அருந்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது வடமங்கலம் - மங்கலம் சாலையில் பொது இடத்தில் மது அருந்திவிட்டு, அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுபட்ட கீழ்சாத்தமங்கலம் புதுநகர் குமரன், 31; அருள், 43, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், கரிக்கலாம்பாக்கம் போலீசார் பொது இடத்தில் மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்ட கோர்க்காடு அய்யனார் கோவில் தெரு கணேசன், 34; வில்லியனுார் பாலாஜி நகர் கண்ணன், 41, ஆகியோரை கைது செய்தனர்.