/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனை தனியார் கம்பெனியில் ரூ.4 லட்சம் காப்பர் கேன்கள் திருட்டு
/
திருபுவனை தனியார் கம்பெனியில் ரூ.4 லட்சம் காப்பர் கேன்கள் திருட்டு
திருபுவனை தனியார் கம்பெனியில் ரூ.4 லட்சம் காப்பர் கேன்கள் திருட்டு
திருபுவனை தனியார் கம்பெனியில் ரூ.4 லட்சம் காப்பர் கேன்கள் திருட்டு
ADDED : ஆக 25, 2024 05:46 AM
திருபுவனை: திருபுவனை அருகே தனியார் கம்பெனியில் ரூ.4 லட்சம் மதிப்புடைய காப்பர் பொருட்களை திருடிச் சென்ற இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்தில் வாகனங்களுக்கு பிரேக் இயந்திரம் தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. கடந்த 22ம் தேதி நிறுவனத்தில் இருப்பு வைக்கப்பட்ட காப்பர் கேன்களை ஊழியர்கள் சரிபார்த்தனர்.
அப்போது 12 காப்பர் கேன்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாக மேலாளர் ஹரிகரன் கொடுத்த புகாரின்பேரில், திருபு வனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் சுதந்திர தினத்திற்காக கடந்த 15 மற்றும் 16ம் தேதி கம்பெனிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரவு 10.00 மணிக்கு மேல் முகமூடி அணிந்த இரண்டு பேர் தொழிற்சாலையின் மதில் சுவரை ஏறிக்குதித்து உள்ளே புகுந்து, 12 காப்பர் கேன்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
திருட்டு போன காப்பர் கேன்களின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.