/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஒரு சிலைக்கு 4 பேர் அனுமதி
/
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஒரு சிலைக்கு 4 பேர் அனுமதி
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஒரு சிலைக்கு 4 பேர் அனுமதி
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஒரு சிலைக்கு 4 பேர் அனுமதி
ADDED : செப் 07, 2024 06:58 AM
புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஒவ்வொரு சிலையுடன் பாஸ் வைத்திருக்கும் 4 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சீனியர் எஸ்.பி., தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி முழுதும், முக்கிய சாலை சந்திப்புகளில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடக்கிறது. இந்த விநாயகர் சிலைகள் வரும் 11ம் தேதி கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு தொடர்பாக சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா தலைமையில், வனத்துறை, மின்துறை, பொதுப்பணித்துறை, விழா குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், விநாயகர் சிலை ஊர்வலம் அவ்வை திடல் துவங்கி காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, அஜந்தா சிக்னல், எஸ்.வி.பட்டேல் சாலை, கடற்கரை சாலை வழியாக சென்று கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது. இந்த வழிப்பாதையில் இடையூறாக உள்ள மரக்கிளையை வனத்துறை அப்புறப்படுத்த வேண்டும். தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மின் துறை சரிசெய்ய வேண்டும்.
ஊர்வலத்தில் ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும், விழா குழு அளிக்கும் பாஸ் வைத்துள்ள 4 பேர் மட்டுமே உடன் வர வேண்டும். பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. மதுபோதையில் ஆடல் பாடல் இருக்க கூடாது. விநாயகர் சிலை கரைக்க கடற்கரையில் சாய்தளம் அமைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.