ADDED : மே 09, 2024 04:24 AM
மந்தாரக்குப்பம்: லோக்சபா தேர்தலில் ஓட்டளித்ததை தெரிவிக்காத வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் அடுத்த ரோமாபுரியை சேர்ந்தவர் அந்தோணி பெஞ்சமின் ராஜ்,32; இவர், ரோமாபுரி பழைய என்.எல்.சி., கேட் அருகில் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற அதே பகுதியை சேர்ந்த மார்ட்டின்,40 அருண்,35. ராகுல்,26, பீரவீன் 33 ஆகியோர், லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டாய் என, அந்தோணி பெஞ்சமின் ராஜிடம் கேட்டுள்ளனர்.
பதில் சொல்ல மறுத்ததால் ஆத்திரமடைந்த மார்ட்டின் உள்ளிட்ட நான்கு பேரும் பெஞ்சமின் ராஜை சரமரியாக தாக்கினர்.
இதில் காயமடைந்த அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மார்ட்டின், அருண், ராகுல், பீரவின் ஆகியோரை கைது செய்தனர்.