ADDED : மே 01, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார், : திருக்கனுார் பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்தியதுடன், போதையில் பொதுமக்களுக்கு இடையூர் ஏற்படுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பொது இடத்தில் மது அருந்தி, அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட விழுப்புரம், சாத்தனுார் பகுதியை சேர்ந்த அழகுதமிழ், 29; மாரியப்பன், 22; தென்புத்துார் பொன்னப்பன், 25; விஜய், 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.