/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 பேரிடம் ரூ. 1.20 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
4 பேரிடம் ரூ. 1.20 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
4 பேரிடம் ரூ. 1.20 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
4 பேரிடம் ரூ. 1.20 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : மே 06, 2024 05:30 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் 4 பேரிடம் 1.20 லட்சம் பணம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் செங்கேணி அம்மாள். இவர் பம்பர் பரிசு தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர், உங்கள் எண்ணுக்கு 7.40 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது. அந்த தொகையை டிபாசிட் செய்வதற்கு முன் பணம் கட்ட வேண்டும் என, கூறினார். அதை நம்பி, அவர், 15 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.
புதுச்சேரியை சேர்ந்த முகமது அலி என்பவரின் பெயரில் போலியான பேஸ் புக்கை மர்ம நபர்கள் துவங்கி, அவரது நண்பர் பணம் கேட்டது போல தகவல் அனுப்பினர். அதை நம்பி, அவர் 55 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.
அதே போன்று, சரண் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம், மொபைல் போன் வாங்க 27 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஆர்டர் செய்தார். மொபைல் போன் வராததால், ஏமாந்தார்.
அதேபோல், ஆனந்தராஜ் என்பவர் புதிய மொபைல் போன் வாங்க ஆன்லைன் மூலம் 23 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.
இது குறித்து புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.