/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ. 38.78 லட்சம் 'மோசடி'
/
புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ. 38.78 லட்சம் 'மோசடி'
ADDED : மார் 10, 2025 06:23 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், 4 பேரிடம் 38.78 லட்சம் ரூபாயை சைபர் கிரைம் குற்றவாளிகள் ஏமாற்றியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அருண். இவர் மர்ம கும்பலின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்தார். அதில், முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற தகவலை நம்பி, லிங்க் மூலம் பல்வேறு தவணைகளில், 36.91 லட்சம் ரூபாய் அனுப்பினார். பின், முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது, அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.
உருளையன்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன். இவரது மொபைலில் பேசிய நபர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறினார். அதை நம்பி, விண்ணப்பித்த அவரிடம், விசாவிற்கு டிபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும் என, மர்மநபர் கூறினார். இதற்காக, 1.45 லட்சம் ரூபாயை அனுப்பி, மோசடி கும்பலிடம் அவர் ஏமாந்தார்.
பெரியக்காலாப்பட்டு ரேகா 20 ஆயிரம் ரூபாய், மதகடிப்பட்டு பழனி 22 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.