/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்டிக்கடையில் திருட்டு 4 வாலிபர்கள் கைது
/
பெட்டிக்கடையில் திருட்டு 4 வாலிபர்கள் கைது
ADDED : ஏப் 07, 2024 05:16 AM
கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே பெட்டிக்கடையில் திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி இருசாயி, 40; சித்தலுார் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே தங்கி, பெட்டிக் கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை 4:00 மணியளவில் சத்தம்கேட்டு எழுந்து பார்த்தபோது கடையில் கல்லா பெட்டியில் இருந்த 600 ரூபாயை 4 பேர் திருடிக் கொண்டிருந்தனர்.
உடன் கூச்சலிட்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 4 பேரையும் பிடித்து வரஞ்சரம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் தியாகதுருகத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் மகன்கள் ராமகிருஷ்ணன், 18; பாலகிருஷ்ணன், 23; செல்வம் மகன் பாலாஜி, 20; ஏழுமலை மகன் சீனுவாசன், 24; என தெரியந்தது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

