/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4,000 பேருக்கு காதுகேளாமை பிரச்னை சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்
/
4,000 பேருக்கு காதுகேளாமை பிரச்னை சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்
4,000 பேருக்கு காதுகேளாமை பிரச்னை சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்
4,000 பேருக்கு காதுகேளாமை பிரச்னை சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்
ADDED : மார் 04, 2025 04:22 AM
புதுச்சேரி: செவித்திறன்களை பாதுகாக்க அதிக சத்தங்களை தவிர்க்க வேண்டும் என, சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி சுகாதார துறை செயலர் ரவிச்சந்திரன் செய்திக்குறிப்பு:
ஆண்டுதோறும் மார்ச் மாதம் உலக செவித்தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சுகாதார துறை முன்னெடுத்து வருகிறது.
செவிப்புலன் நமது மிக முக்கியமான உணர்வு உறுப்பு. தற்போது மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் வரை செவித்திறன் குறைப்பாடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை அளிக்கப்படாத செவித்திறன் சமூக தனிமைக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் வழிவகுக்கும். செவித்திறனை பாதுகாக்க இந்தாண்டு மக்களின் மனநிலையை மாற்றுதல் மற்றும் அனைவருக்கும் செவித்திறன் பாதுகாப்பை உறுதி செய்தல் என்ற கருப்பொருளில் உலக செவித்தினம் கடை பிடிக்கப்படுகிறது.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் 39,000 பேருக்கு செவித்திறன் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 4 ஆயிரம் பேருக்கு காது கேளாமை இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு 2,077 காது கேட்கும் கருவிகள் கடந்த ஆண்டில் பொருத்தப்பட்டன.
அறுவை சிகிச்சை மூலம் 2,100 காது கேளாமை தொடர்பான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மூன்று குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் மதிப்புள்ள காக்ளியரின் எம்பிளான்ட் அதிநவீன கருவி அறுவை சிகிச்சை மூலம் வெற்றிக்கரமாக பொருத்தப்பட்டது. இதன் மூலம் அவர்களின் செவித்திறன் இயல்பு நிலைக்கு திரும்பியது.
செவித்திறனை பாதுகாக்க அதிக சத்தங்களை தவிர்க்க வேண்டும். ெஹட்போன்களை இடைவெளி கொடுத்து கவனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.