/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு புகுந்து 43 சவரன் நகைகள் திருட்டு; கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் என கூறி கைவரிசை

ADDED : ஜூலை 22, 2024 01:42 AM
புதுச்சேரி : வில்லியனுார் அருகே கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் என கூறி, வீட்டிற்குள் புகுந்து 43 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி உறுவையாறு, ராமச்சந்திரா நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா, 68.
இவரது மகன் வெளியூரில் வேலை செய்கிறார். மருமகள், பேத்தி மற்றும் இளைய மகனுடன் வசித்து வருகிறார். கடந்த 19ம் தேதி, காலை 10:00 மணிக்கு சந்திரா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, பைக்கில் இருவாலிபர்கள், வீட்டின் வாசலில் வந்து நின்றனர். வீட்டில் இருந்த சந்திராவை அழைத்து, தாங்கள் கொம்யூன் பஞ்சாயத்தில் பணியாற்றுவதாக அடையாள அட்டை காண்பித்தனர். பின்பு, குடிநீர் பைப் லைன் சோதனை செய்ய வந்துள்ளோம் என, தெரிவித்தனர்.
இதனை நம்பி சந்திரா வீட்டின் கதவை திறந்து இருவரையும் வீட்டிற்குள் அனுமதித்தார்.மாடியில் உள்ள குடிநீர் தொட்டியை சந்திராவுடன் சென்று இரு வாலிபர்களும் பார்வையிட்டனர். சற்று நேரத்தில் அங்கிருந்து கீழே இறங்கி பைக்கில் வேகமாக புறப்பட்டு சென்றனர்.
சந்திரா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோக்களை திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 21 லட்சம் மதிப்புள்ள 43 சவரன் நகைகள்திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகைகளை திருடிச் சென்றமர்ம நபர்களை தேடி வருகின்றனர்.