/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அஞ்சல்துறை விபத்து காப்பீடு முகாமில் 4,970 பேர் இணைப்பு
/
அஞ்சல்துறை விபத்து காப்பீடு முகாமில் 4,970 பேர் இணைப்பு
அஞ்சல்துறை விபத்து காப்பீடு முகாமில் 4,970 பேர் இணைப்பு
அஞ்சல்துறை விபத்து காப்பீடு முகாமில் 4,970 பேர் இணைப்பு
ADDED : மார் 08, 2025 04:13 AM
புதுச்சேரி : அஞ்சல்துறை சார்பில் நடந்த விபத்து காப்பீடு சிறப்பு முகாமில், 4,970 பேர் இணைந்துள்ளனர்.
இந்திய அஞ்சல் துறை, இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சார்பில், கடந்த பிப்., 24 முதல் 28ம் தேதி வரை சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு வார சிறப்பு முகாம் நடந்தது. புதுச்சேரி கோட்டத்தில் மொத்தம் 2,106 பேர் இணைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வரை, புதுச்சேரி கோட்டத்திற்கு உட்பட்ட புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளில் காப்பீடு பதிவு சிறப்பு முகாம் நடந்தது. 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள், ஆதார் எண், மொபைல் எண், வாரிசுதாரரின் விபரங்களை கொடுத்து, ஆண்டுக்கு 320 ரூபாய் செலுத்தி 5 லட்சத்துக்கான காப்பீட்டிலும், 559 ரூபாய் செலுத்தி 10 லட்சத்திற்கான காப்பீட்டிலும், 799 ரூபாய் செலுத்தி 15 லட்சத்திற்கான காப்பீட்டிலும் இணைந்தனர்.
இந்த முகாமில் மொத்தம் 4,970 பேர் இணைந்துள்ளதாக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கமால்பாஷா கூறினார்.