ADDED : ஆக 22, 2024 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில், ரெட் ரிப்பன் கிளப் சார்பில், 5 கி.மீ., மினிமாரத்தான் போட்டிநடந்தது.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியை, கல்லுாரி முதல்வர் நாக கார்த்திகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் செண்பகம் முன்னிலை வகித்தார்.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.