/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 பேரிடம் ரூ. 16 லட்சம் 'அபேஸ்': மோசடி கும்பலுக்கு வலை
/
5 பேரிடம் ரூ. 16 லட்சம் 'அபேஸ்': மோசடி கும்பலுக்கு வலை
5 பேரிடம் ரூ. 16 லட்சம் 'அபேஸ்': மோசடி கும்பலுக்கு வலை
5 பேரிடம் ரூ. 16 லட்சம் 'அபேஸ்': மோசடி கும்பலுக்கு வலை
ADDED : ஜூலை 25, 2024 11:08 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேரிடம் நுாதன முறையில் 16 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் பிரபுகாந்தன். இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என, கூறினார். அதை நம்பி அவர், 14.77 லட்சம் ரூபாயை முதலீடு செய்து, ஏமாந்தார்.
நேதாஜி நகரை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு மர்ம நபர், எஸ்.பி.ஐ., வங்கி வெகுமதி தருவதாக போலியான குறுந்தகவலை அனுப்பினார். அந்த லிங்கில் வங்கி விபரங்களை பதிவு செய்த சில நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 36 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. உப்பளம் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரிடம் 13 ஆயிரம், நேதாஜி நகரை சேர்ந்த வசந்திடம், 49 ஆயிரம், பார்த்திராஜிடம், 27 ஆயிரம் ரூபாய் ஏமாந்தனர்.
இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.